ஆளுமை:அகமட் லெப்பை, சாகுல் ஹமீட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகமட் லெப்பை
தந்தை சாகுல் ஹமீட்
தாய் கதீஜா
பிறப்பு 1947.11.03
ஊர் ஏறாவூர்
வகை கவிஞர்

அகமட் லெப்பை, சாகுல் ஹமீட் (1947.11.03 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சாகுல் ஹமீட்; தாய் கதீஜா உம்மா. இவர் ஏறாவூர் அறபா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனது சேவைக் காலத்தின் இறுதியில் மட்டக்களப்பு ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தில் பணியாற்றினார்.

ஏறாவூர் தாஹீர் என்ற புனைபெயரில் கவிதை, கதை, கட்டுரை, நாடகங்கள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, தினக்குரல், தினமுரசு, மெட்ரோ நியூஸ், சுடரொளி போன்ற இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 66-69