ஆளுமை:அகிலேஸ்வரன், சாம்பசிவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேஸ்வரன்
தந்தை சாம்பசிவம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்

அகிலேஸ்வரன், சாம்பசிவம் யாழ்ப்பாணம், சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சாம்பசிவம். இவர் அகில் என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை, நாவல், ஆன்மீகக் கட்டுரை, நூலாய்வுகள் எழுதி வருகிறார். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் www.tamilauthors.com என்ற இணையத்தளத்தை நடத்தி வருகின்றார்.

இவரது படைப்புக்கள் இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் வெளிவரும் ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது, ராணி வாரமலர், ஈழத்து வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஞானம், உண்மை, முரசொலி, கனடா உதயன், செந்தாமரை, ஈழநாடு, கனடா முரசொலி, தமிழ்டைம்ஸ், தமிழ்பூங்கா போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திசை மாறிய தென்றல் (நாவல், 2001), கண்ணின் மணி நீயெனக்கு (நாவல், 2010), கூடுகள் சிதைந்த போது (சிறுகதைகள், 2011) விரதங்களும் பலன்களும் (2002), இந்து மதம்: மறைபொருள் தத்துவ விளக்கம் (2004) ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 4697 பக்கங்கள் 20