ஆளுமை:அஸ்லம், அப்துஸ்ஸலாம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸ்லம்
தந்தை அப்துஸ்ஸலாம்
தாய் றஹீமா உம்மா
பிறப்பு 1982.05.25
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்


அஸ்லம், அப்துஸ்ஸலாம் (1982.05.25 - ) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துஸ்ஸலாம்; தாய் றஹீமா உம்மா. இவர் மன்னார் - முசலி முஸ்லீம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றதோடு கற்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை, பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயம், காஸிமிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பள்ளிவாசல்துறை தாருல்ஹில்மா அஹதியா இஸ்லாமியப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவரது முதலாவது ஆக்கம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவமணி பத்திரிகையில் இடம்பெற்றது. மேலும் இவை தான் தமிழ்ப்போராளிகளின் பிரதியுபகாரம் என்பது இவரது முதல் கட்டுரையாகும். இவரது ஆக்கங்கள் நவமணி, வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 90-91