ஆளுமை:ஆயிஷா சித்தீக்கா

From நூலகம்
Name ஆயிஷா சித்தீக்கா
Pages முஹம்மத் நளீம்
Pages உம்மு தாஹரா
Birth
Place கொழும்பு
Category எழுத்தாளர்

ஆயிஷா சித்தீக்கா கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத் நளீம்; தாய் உம்மு தாஹரா. ஏ.எஸ்.பைரூஸியா என்ற புனைபெயரில் எழுதிவருகிறார். ஆரம்பக் கல்வியை ஆங்கிலமொழியில் 8ஆம் தரம்வரை கொழும்பு கைரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் கற்றார். அரபு மொழியுடன் கூடிய க.பொ.த உயர்தரம் வரை கல்-எளிய அரபுக் கல்லூரியில் கற்றார். பட்டதாரியான இவர் ஒரு ஆசிரியராவார்.

நாடகப் பிரதிகளை எழுதும் ஆற்றல் கொண்ட இவரின் நாடகங்கள் தமிழ்த்தினப் போட்டியிலும் மீலாத்தினப் போட்டியிலும் வலயமட்ட, மாகாண மட்ட போட்டியிலும் பரிசில்களைப் பெற்றுள்ளன. கவிபாடும் திறமையைக் கொண்டுள்ளார் எழுத்தாளர். மௌலவியா ஆசிரியையான ஆயிஷா சித்தீக்கா அரபுமொழி எழுத்தணி (Arabic writers for Beginners) என்ற மூன்று பாகங்களைக் கொண்ட செயல் நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்-சிங்கள-ஆங்கில ஆகிய மூன்று மொழிகளுமான விளக்கங்களுடன் இவை வெளிவந்திருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.