ஆளுமை:இரத்தினம், சின்னத்தம்பி

From நூலகம்
Name இரத்தினம்
Pages சின்னத்தம்பி
Birth 1880
Pages 1940
Place பருத்தித்துறை
Category கலைஞர்

இரத்தினம், சின்னத்தம்பி (1880 - 1940) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இரத்தினம் அவர்களின் வாசிப்பானது நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயசுகமும் உடையதாக இருந்தன. இவர் மிருதங்க கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள்ளார். இவர் சிலகாலம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். இக்காலத்தில் மிருதங்க இசை வகுப்புக்களை நடாத்திப் புலமைமிகு மாணவர்களை உருவாக்கியுள்ளார். நவாலி த.இரத்தினம், என்.தங்கம் ஆகியோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 11-12