ஆளுமை:இராசதுரை, சந்திரசேகரம்

From நூலகம்
Name இராசதுரை
Pages சந்திரசேகரம்
Birth 1916.10.12
Place மாதனை, பருத்தித்துறை
Category கலைஞர்

இராசதுரை, சந்திரசேகரம் (1916.10.12 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சந்திரசேகரம். தனது சகோதரன் அண்ணாவியார் செல்லத்துரை அவர்களிடம் நாடகக்கலையைப் பயின்று 1922 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.

நானூறுக்கும் மேற்பட்ட இசை நாடகங்களில் நடித்ததுடன் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஆலயங்கள் பலவற்றிலும் இவர் பண்ணிசை பாடியுள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130