ஆளுமை:இராசரெத்தினம், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name இராசரெத்தினம்
Pages கணபதிப்பிள்ளை
Pages இராசம்மா
Birth 1923.07.02
Place ஆரையம்பதி
Category எழுத்தாளர்

இராசரெத்தினம், கணபதிப்பிள்ளை (1923.07.02 - ) யாழ்ப்பாணம், ஆரையம்பதியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் இராசம்மா. இவர் ஆரையம்பதி இராமகிருஷ்ண பாடசாலையிலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

இவர் உணவுக்கட்டுப்பாட்டு இலாகா ஊழியராகவும், திருகோணமலை கடற்படைத்தள எழுதுவினைஞராகவும், மட்டக்களப்பு கச்சேரியில் எழுதுவினைஞராகவும், அம்பறை கமத்தொழில் சேவைப்பகுதி எழுதுவினைஞராகவும், மட்டக்களப்பு கூட்டுறவு காரியாலயத்திலும் பணியாற்றி இளைப்பாறியுள்ளார்.

1980 இல் தினகரன், வீரகேசரி, சிவநெறி பத்திரிகைகள் மூலம் எழுத்துலகில் நுழைந்த இவர், சமய அமைப்புக்களிலும் பணி செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 113-115