ஆளுமை:இராஜினி, தேவராஜன்

From நூலகம்
Name இராஜினி
Pages லோகநாதன்
Birth
Place மானிப்பாய்
Category எழுத்தாளர்

இராஜினி, தேவராஜன் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை லோகநாதன்; ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் கல்லூரியிலும், வத்தளை அர்ச் . அன்னம்மாள் பாடசாலையிலும் கற்றார். உயர்தரக் கல்வியை இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் கற்றார். லண்டன் ஐ.சி.எம்.ஏ கற்கை நெறியை பகுதித் தேர்ச்சி அடைந்துள்ள எழுத்தாளர் பல நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.

ஆன்மீகத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவரின் கட்டுரைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் இந்து சாதனம் இதழில் இவரின் ஆன்மீக கட்டுரைகள் வெளிவருகின்றன.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 9853 பக்கங்கள் 22-23
  • நூலக எண்: 14634 பக்கங்கள் 36-37