ஆளுமை:இராணி பௌசியா

From நூலகம்
Name இராணி பௌசியா
Pages மாணிக்கம்
Birth 1962.07.31
Place கல்லளை
Category எழுத்தாளர்

இராணி பௌசியா பொலன்னறுவை கல்லளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மாணிக்கம்; இந்துக் குடும்பத்தில் பிறந்து இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பக் கல்வியை பொலன்னறுவை அல் அஸ்ஹர் மகாவித்தியாலயத்தில் கற்றார். இப் பாடசாலையின் வரலாற்றில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சயைில் (1978) முதலாவதாக சித்தியெய்திய பெருமைக்குரியவர் இராணி பௌசியாவார். ஐந்து ஆண் குழந்தைகளின் தயாராவார். இவர் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய விழாவின் போது மாகாண மட்டப் போட்டியில் கலந்துகொண்டு நாட்டார்பாடலில் முதலாம் இடத்தையும் கவிதைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட ரீதியான சாஹித்திய போட்டிகளிலும் வருடந்தோறும் கலந்துகொள்வார். அகயாத்திரையும் அகலாத்திரையும் என்ற இவரது முதலாவது கவிதை நூல் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவரின் இரண்டாவது நூலான அகல் திரையும் ஒளிவிளக்கும் என்ற கவிதைத் தொகுதியை விரைவில் வெளியிடவுள்ளார்.

வெளி இணைப்புக்கள்