ஆளுமை:இராதாகிருஷ்ணன், சின்னத்துரை

From நூலகம்
Name இராதாகிருஷ்ணன்
Pages சின்னத்துரை
Pages தங்கரத்தினம்
Birth 1960.07.27
Place சண்டிலிப்பாய்
Category ஆசிரியர், அதிபர்

இராதாகிருஷ்ணன், சின்னத்துரை (1960.07.27 - ) யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், இந்துசமய ஆசிரிய ஆலோசகர். இவரது தந்தை சின்னத்துரை; தாய் தங்கரத்தினம். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிறப்பு மலர்களில் காலத்துக்குக் காலம் பல பயனுள்ள கட்டுரைகளையும், வகுப்பேற்றம், நாற்காலிப் பிணங்கள், புனிதர் காட்டிய வழி முதலான நாடகங்களையும் துன்பப் பிரளயம் என்னும் சிறுகதைத் தொகுதியையும் எழுதி மேடையேற்றியுள்ளார். இவர் சாமஶ்ரீ கனகஜோதி, அறிவொளி சாமஶ்ரீ, சமூகஜோதி முதலான கௌரவப்பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 76