ஆளுமை:இராமச்சந்திரன், சின்னத்தம்பி

From நூலகம்
Name இராமச்சந்திரன்
Pages சின்னத்தம்பி
Birth 1941.09.26
Place தம்பாபிட்டி
Category கலைஞர்

இராமச்சந்திரன், சின்னத்தம்பி (1941.09.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, தம்பாபிட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தனது 21 ஆவது வயதிலிருந்து கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இவர் அதியரசன், பண்டார வன்னியன், அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன் போன்ற நாட்டுக்கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று, ஊர்காவற்துறை, நாவாந்துறை, நாவற்குழி, அனலைதீவு, நாரந்தனை, புளியங்கூடல், அராலி போன்ற இடங்களில் தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார். மேலும் 2 ஆவது உலக இந்து மாநாட்டினை முன்னிட்டு ஊர்காவற்துறையில் நடைபெற்ற பிரதேச மட்ட நிகழ்ச்சியில் பண்ணிசைத்துறைக்குத் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

இவரது ஆற்றலுக்காக இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி என்ற பட்டத்தினையும், ஊர்காவற்துறை கலாச்சார சபையினால் கூத்து கலையரசு மற்றும் பண்ணிசை வல்லாளன் முதலான பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 132-133