ஆளுமை:உதயகுமார், பசுபதி

From நூலகம்
Name உதயகுமார்
Pages பசுபதி
Birth 1964.05.06
Place அளவெட்டி
Category எழுத்தாளர்

உதயகுமார், பசுபதி (1964.05.06 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பசுபதி. இவர் அ. ச. முருகானந்தம், கா. சிவத்தம்பி போன்றோரிடம் கல்வி கற்றார்.

1980 ஆம் ஆண்டில் தனது கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர், பல மேடை நாடகங்களை எழுதியதுடன் நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில் கலைஞர்களை இனங்கண்டு கலைஞர்களாக மிளிர வைத்தல், வானொலி, பத்திரிகைகளுக்குச் சிறுகதை, நாடகம், கவிதை போன்றவற்றை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்காக ஆற்றியுள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டில் வானொலிப் பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்கு ஜனாதிபதி விருது, மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 03