ஆளுமை:உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா

From நூலகம்
Name உமறு நெய்னாப் புலவர்
Pages மதார்ஸா
Pages ஹஜ்ஜும்மா
Birth 1907.12.08
Place மூதூர்
Category புலவர்

உமறு நெய்னாப் புலவர், மதார்ஸா (1907.12.08 - ) மூதூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மதார்ஸா; தாய் ஹஜ்ஜும்மா. மூதூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்ற இவர், 1939.05.04 இல் ஆசிரியராக நியமனம் பெற்று மூதூர், கிண்ணியா, சம்பூர், தோப்பூர் ஆகிய இடங்களில் கடமையாற்றியுள்ளார்.

இவர் பல ஊர்களில் மேடை அமைப்பித்து இலக்கிய பாராயண நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரும் இவரது நண்பராகிய சவரிமுத்துப் புலவரும் ஓய்வுநேரத்தில் செய்யுள் வகையிலே சிலேடை, மடக்கு, நாகபந்தம் போன்ற சித்திரக் கவிகளைக் கற்றுத் தேறினர். இவர் புகாரிக் காவியம் என்னும் நாப்பதொன்பது கலிவிருத்தப் பாக்களாலான ஒரு நூல் செய்துள்ளார். மேலும் வெண்பா யாப்பில் நபி மொழிகள் நூலை ஆக்கியுள்ளார். இது 13 பாடல்களைக் கொண்டது. மேலும் பெண்கல்வி எனும் தலைப்பில் ஏழு பாடல்களும், இஸ்லாமிய குறள் என்ற தலைப்பில் பத்து குறட்பாக்களும், அரேபிய நாட்டின் அன்றைய நிலை என்னும் தலைப்பில் பன்னிரண்டு விருத்தங்களும் செய்துள்ளதோடு பத்துக் குறட்பாக்களை சோபனம் என்னும் தலைப்பில் எழுதியுமுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 221-223