ஆளுமை:உருத்திரமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை

From நூலகம்
Name உருத்திரமூர்த்தி
Pages சிதம்பரப்பிள்ளை
Birth
Place காரைநகர்
Category வழக்கறிஞர்

உருத்திரமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை. காரைநகர், சந்திரந்தை கிழுவனைக்கேணியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட வழக்கறிஞர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கொழும்புச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் அப்புக்காத்தாகப் பணியாற்றினார். அதேவேளை சட்டக்கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டபீடம் ஆகிய இடங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காரைநகர் சிவன் கோவில் அடியார் சபை ஒன்றை நிறுவ முன்னோடியாக இருந்தவர் இவரே.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 352