ஆளுமை:கந்தப்பிள்ளை, வினாசித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பிள்ளை
தந்தை வினாசித்தம்பி
பிறப்பு 1840
இறப்பு 1913
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை, வினாசித்தம்பி (1840 - 1913) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர், சமயப் பெரியார். இவரது தந்தை வினாசித்தம்பி. இவர் ஆறுமுகநாவலருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என்பதும் வித்துவ சிரோண்மணி பொன்னம்பலபிள்ளையினது மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாவலர் வழியில் தீவுப்பகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கப் பணியாற்றியவர். 1880 ஆம் ஆண்டில் வேலணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவியதோடு, நெடுந்தீவிலும் ஒரு பாடசாலையை நிறுவும் நோக்கில் ஆ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களை அங்கு அனுப்பி ஒரு திண்ணைப்பள்ளியையும் நடத்தினார். சைவ தத்துவங்களை விளக்கும் முகமாக சைவ சூக்மார்த்த போதினி என்றொரு சித்தாந்தச் சஞ்சிகையை வேலணையில் அச்சிட்டதோடு தத்துவப்பிராகாசம் என்ற நூலையும் அச்சிற்பதித்துள்ளார்.

பாடசாலை ஸ்தாபகராக, அதிபராக, புராண உரைகாரராக, சிறந்த சொற்பொழிவாளராக, பத்திரிகையாசிரியராக, பதிப்பாசிரியராகத் தமிழுக்கும் சைவத்திற்கும் அளப்பெரும் சேவைகளை ஆற்றியதோடு, சிறந்த புலவராகவும் விளங்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 01-02
  • நூலக எண்: 963 பக்கங்கள் 65-66
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 39-43