ஆளுமை:சுதாகினி, டெஸ்மன் றாகல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதாகினி
தந்தை சுப்பிரமணியம்
தாய் வாலாம்பிகை
பிறப்பு 1978.10.12
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாகினி, டெஸ்மன் றாகல் (1978.10.12) மட்டக்களப்பு பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வாலாம்பிகை. தனது ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை மட்டக்களப்பு ஏறாவூர் மகாவித்தியாலயத்தில் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பட்டமாகப் பெற்றவர். முதுதத்துமாணிப் பட்டதையும் கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை ஆசிரியராகச் சேவையாற்றி தற்போது ஆசிரியர் கல்வியியளாராக சேவையில் இணைந்து மட்டக்களப்பு ஆசிரியர் மத்திய நிலையத்தில் விரிவுரையாளராகச் சேவையாற்றி வருகின்றார். பெண்கள் இலக்கியம், கட்டுரை, விமர்சனங்கள், கவிதை, சிறுவர் கதை, நாடகம், விவாத அரங்கு போன்ற பல்துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சுதாகினி. இவர் இத்துறைசார்ந்த விருதுகளை அகில இலங்கை ரீதியாகப் பெற்றுள்ளார். கனல், கண்ணாடி முகங்கள் போன்ற கவிதைத் தொகுப்புக்களில் இவரது கவிதைப் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. அடையாளம் என்னும் கவிதைத் தொகுப்பையும் எழுத்தாளர் வெளியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டில் ”சொர்க்க வனம்” என்னும் சிறுவர்கதை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றதுடன் கலாசார அமைச்சினால் நூலுருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதை எழுத்தாளர் பெற்றுள்ளார். சுதாகினியின் 2016ஆம் ஆண்டு மறையாத மறுபாதி என்னும் சிறுகதை தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதுடன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் சுதாகினி. பெண் சஞ்சிகையின் எழுத்தாளர் வட்ட உறுப்பினராகவும் சரணி கலைக்கழகத்தின் உபசெயலாளராகவும் ஏறாவூர்பற்று கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் சேவையாற்றி வருகின்றார். தலைமைத்துவம், நாடகப் பயிற்சி பட்டறை போன்றவற்றின் வளவாளராகவும் செயற்பட்டு வருகிறார். ஈழத்துப் பெண்கள் சஞ்சிகைகள், எண்பதுகளுக்குப் பின் ஈழத்தில் தமிழ்பேசும் பெண்கள் கவிதைகளின் போக்கும் வளர்ச்சியும், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச பாரம்பரிய விளையாட்டுக்கள், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தின் வாழ்வியற் சடங்குகள்.போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

விருதுகள் 2013ஆம் ஆண்டு சிறந்த நடிப்புக்கான விருது அகில இலங்கை ரீதியில் இவருக்கு வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு சுதாகினி, டெஸ்மன் றாகல் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 10479 பக்கங்கள் 39-40