ஆளுமை:ஜெனிபர் அருள்மொழி லெம்பேட், அ

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெனிபர் அருள்மொழி
தந்தை அந்தோனி
தாய் றொசாரி
பிறப்பு
ஊர் மன்னார், வங்காலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெனிபர் அருள்மொழி லெம்பேட், அ மன்னார் வங்காலையில் பிறந்த இசைக் கலைஞர். இவரது தந்தை அந்தோனி தாய் றொசாரி. ஆரம்பக்கல்வியை வங்காலையிலும் இடைநிலை உயர்கல்வியை சுண்டுக்குழி மகளிர், உவைஸ்லி கல்லூரியிலும், யாழ்ப்பாணத்திலும் கற்றார். இசைக்கல்வியினை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியிலும் கற்றார். பட்டதாரியான இவர் ஆசிரியராகப் பணியாற்றகின்றார். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் உள்ளவராக காணப்படுகின்றார். தனது கண் பார்வையை 15 வயதில் இழந்த ஜெனிபர். இவர் கற்பிக்கும் வங்காலை பாடசாலையில் உள்ள மேலேத்தேய மற்றும் கீழைத்தேய இசைக்குழு இரண்டினையும் இவரே வழிநடத்துகின்றார். சங்கீத கலாவித்தகர் – வட இலங்கை சங்கீத சபை, டிப்ளோமா இன் மியூசிக் சுவாமி விபுலானந்தா இடை நடனக் கல்லூரி, B.F.A (Hon) Sip Music Eastern Univercity Batticaloa தனது இசைத்துறை சார் பட்டங்களை பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளியான இவர் மூன்று பட்டப்படிப்புக்களை நிறைவு செய்துள்ளதோடு ஸ்ப்த ஸ்வரப்புன்னை என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். அருட்தந்தை லீனஸ் வெளியிட்ட இதயம் திறந்தேன் இறுவட்டில் நான்கு பாடல்களுக்கு மெட்டமைத்து அதில் இரண்டு பாடல்களை இவர் இயற்றிப் பாடியுள்ளார்.

இவரின் நேர்காணல்கள் ஐரிஎன் தொலைக்காட்சியின் உதயதரிசனம் நிகழ்ச்சியில் 1999ஆம் ஆண்டு ஒலிஒளிபரப்பட்டுள்ளது. அருட்தந்தை மலர்வேந்தன் அவர்களின் புலரும்பொழுது இறுவட்டிலும் இவர் பாடியுள்ளார். அருட்தந்தை போல் சற்குணராஜா அவர்களின் ஏற்பாட்டில் இரண்டரை மணித்தியாலம் நடைபெற்ற இசை கலந்த நாட்டிய நாடக நிகழ்வில் 16 பாட்டுக்கள் இடம்பெற்றது இவற்றிற்கு இடையில் வசனம் வரும் அந்த 16 பாட்டுக்கும் இவர் மெட்டமைத்துப் பாடியுள்ளார். மேலைத்தேய இசை, கர்நாடக இசை, சினிமா இசை என்ற மூன்று துறைகளைிலும் இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவர்.

வெளி இணைப்புக்கள்