ஆளுமை:தனலெட்சுமி, வில்வநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனலட்சுமி
தந்தை செல்லத்தம்பி
தாய் லோகேஸ்வரி
பிறப்பு 1953.07.19
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனலெட்சுமி, வில்வநாதன் (1953.07.19) யாழ்ப்பாணம் வேலணை நாரந்தனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்தம்பி; தாய் லோகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை யா/வேலணை நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி பட்டத்தையும், யாழ்ப்பல்கலைக்கழக கல்வியியல் முதுத்தத்துவமாணி பட்டத்தையும் முடித்துள்ள தனலெட்சுமி கல்வி பின் டிப்ளோமாவையும் முடித்துள்ளார் அத்துடன் இவர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். ஆரம்பத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியத் தொழில் செய்த தனலெட்சுமி யாழ் தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவுக்கான இணைப்பாளராகவும் சிரேஷ்ட விரிவுரையாளராக 1992ஆம் ஆண்டில் இருந்து கடமையாற்றுகின்றார். கல்வியியல் சார்ந்த கட்டுரைகளை சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார் இந்த கல்வியியலாளர். இவரின் ஆக்கங்கள் கல்வியியலாளன், சரையு போன்ற சஞ்சிகைகளிலும் வலம்புரி பத்திரிகையிலும் வெளியாகியுள்ளன. பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து பெண்கள் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் வளவாளராகச் செயற்பட்டு வருகிறார். மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதிலும் வளவாளராகச் செயற்படுகின்றார். பெண் தலைமைத்துவம், பெண்கள் பிரச்சினைகள் தொடர்பிலான கருத்தரங்குகளிலும் வளவாளராகச் செயற்பட்டு வருகிறார். குடும்பத் தலைவிகள் நேரம் முகாமைத்துவம் சரியான விதத்தில் மேற்கொள்வதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்ற கொள்கையையும் நடைமுறையையும் பின்பற்றுவதாகத் தெரிவிக்கும் தனலெட்சுமி, ஆசிரிய கல்வி தொடர்பாக அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளதோடு ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறார்.

விருதுகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது 2018ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான சங்கத்தினால் வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு தனலெட்சுமி, வில்வநாதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.