ஆளுமை:தயாமினி, குபேரமூர்த்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயாமினி
தந்தை திருஞானசம்பந்தர்
தாய் மங்களேஸ்வரி
பிறப்பு 1974.07.27
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயாமினி, குபேரமூர்த்தி (1974.07.27) யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை திருஞானசம்பந்தர்; தாய் மங்கலேஸ்வரி. ஆரம்பத்தில் ராதை குபேரன் எனும் புனைபெயரில் பல ஆக்கங்களை எழுதி வந்தாலும் தற்பொழுது தனது சொந்தப் பெயரிலேயே ஆக்கங்களை எழுதி வருகிறார். இணுவில் மத்தியக்கல்லூரியில் கல்வி கற்றார். கவிதை, கட்டுரை எழுதுவதுடன் ஓவியம் வரைவதிலும் திறமைக் கொண்டவர் தயாமினி. உதயன் பத்திரிகையிலும், வலு என்ற புத்தகத்திலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. 2017ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ள எழுத்தாளரின் பெருமளவான ஆக்கங்கள் இணையத்தின் ஊடாகவே வெளிவந்துள்ளன. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான இவரின் பல கவிதைகள் வெற்றிபெற்றுள்ளதுடன் சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார். இவரின் கவிதைகளை நிலாமுற்றம், கம்பன் கவிக்கூடம், முத்தமிழ்க்களம், கவியுலகப் பூஞ்சோலை, தமிழ்ச்சேவை, சங்கே முழங்கு, விரலோவியக் களஞ்சியம், திவ்வியகவிதைக் குழுமம், ஔவைக்கவிதைக் குழுமம், தமிழன்னைத் தமிழ் பேரருவி, தேன், தமிழ்ச்சாரல், முத்தமிழ்ச்சாரல், பாசக்திக்கவியுறவுகள், வாழ்த்துக்கள் குழுமம், நதியோர நாணல்கள், தமிழ்ச் சிறகு, நுட்பம், அமிர்தம், கவிதைகள் சொல்லவா குழுமம், ழகரம் குழுமம், தேடல் ஆகிய இணையத்தில் வெளியாகியுள்ளதுடன் அக்கவிதைகள் வெற்றிகளையும் பெற்றுள்ளன.

விருதுகள்

கவித்தாரகை விருது 2019ஆம் ஆண்டு

கவிச்சரம் விருது – டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்கா இணையத்தின் ஊடாக.

வெளி இணைப்புக்கள்