ஆளுமை:தவராசா, கிருஸ்ணபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவராசா
தந்தை கிருஸ்ணபிள்ளை
பிறப்பு 1954.07.29
ஊர் மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவராசா, கிருஸ்ணபிள்ளை (1954.07.29) மணற்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த கலைஞர்.முல்லை றமணன் என அறியப்படுகிறார். இவரது தந்தை கிருஸ்ணபிள்ளை; பாடசாலைக் காலத்திலேயே கலைத்துறையில் ஈடுபட்டு வந்தார். இரத்த சிம்மாசனம், நண்பன்கனவு, அனார்க்கலி, ஓதல்லோ, பழிக்குப்பழி, பண்டாரவன்னியன், அரிச்சந்திரா முதலான நாடகங்களில் நடித்துள்ளார். பண்டாரவன்னியன் என்னும் நாடகத்தில் நடித்தமைக்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றார்.

இவர் நடிகர், எழுத்தாளர், நாடக நெறியாளர், நாடக பிரதி எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். முள்ளியவளைக் கலைவட்டாரம் தயாரித்த செருப்பு, கண்ணீர் கணங்கள் ஆகிய குறும் திரைப்படங்களிலும், யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ஒருவன் என்ற முழுநீளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமுதாய அரக்கன், மானிடச்சிக்கல் முதலான நாடகங்கள் இவரால் எழுதப்பட்டவை.

விருதுகள் பண்டாரவன்னியன் என்னும் நாடகத்தில் நடித்தமைக்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது.

கலாவிஸ்வஜோதி விருது.