ஆளுமை:பிறைநிலா, கிருஷ்ணராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிறைநிலா
தந்தை கிருஷ்ணராஜா
தாய் சிவகுமாரி
பிறப்பு
ஊர் கோண்டாவில்
வகை பெண் ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறைநிலா, கிருஷ்ணராஜா யாழப்பாணம் கோண்டாவிலில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை கிருஷ்ணராஜா; தாய் சிவகுமாரி. ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கோண்டாவில் இந்து மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும், உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புக்கலைமாணி பட்டம் பெற்றுள்ளார். ரூபவாஹினிக்கூட்டுத்தாபனத்தின் internship பயிற்சியையும் பெற்ற இவர் பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டு ஊடகக் கற்கை துறையில் Demonstrator ஆகவும் பணியாற்றியுள்ளார்.

வாசிப்பதில் சிறுவயது முதலே மிகவும் ஆர்வம் கொண்ட பிறைநிலா ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர், ஆவணப்பட இயக்குனர், புகைப்படப்பிடிப்பாளர், கவிதாயினி எனும் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வானொலி அறிவிப்புத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாக சுடர் எம்.எம் மற்றும் அனலை வானொலியில் அறிவிப்பாளராக உள்ளார்.

சிறுவயதில் இருந்தே எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவரின் முதல் எழுத்துத்துறை பிரவேசத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தது ஈழுநாடு பத்திரிகையெனக் குறிப்பிடுகிறார். இவரின் ஆக்கங்கள் ஜீவநதி, தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும், உதயன், தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

”நாங்களும் இருக்கிறம்” எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் யாழ்ப்பாணத்தின் மாற்றுப்பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சாவல்களைப் பற்றிப் பேசுகின்றது. சமூக செயற்பாட்டாளராக இருந்துவரும் பிறைநிலா சமூகத்தில் சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் இயலுமான முயற்சிகளை செய்து வருகின்றார்.


குறிப்பு : மேற்படி பதிவு பிறைநிலா, கிருஷ்ணராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்