ஆளுமை:மாணிக்கராஜா, தமிழின்பம்'

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தமிழின்பம்
தந்தை தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை
தாய் தனபாக்கியம்
பிறப்பு 1956.07.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கராஜா, தமிழின்பம் (1956.07.25) யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை; தாய் தனபாக்கியம். உடுப்பிட்டி ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் கல்லூரி, கொழும்பு வெள்ளவத்தை, சாந்த கிளயர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். களனி வித்தியலங்காரப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்பு பட்டதாரியாவார். தமிழின்பம் பிரபல ஊடகவயிலாளர் கமிலினி செல்வராஜன் அவர்களின் சகோதரியுமவார். இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்பட்ட தகவல் திணைக்களத்தில் உதவி பத்திராதிபராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார் தமிழின்பம் தமிழ்நலன் எனும் பத்திரிகையினதும் புத்தொளி எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டார். 1984ஆம் ஆண்டு கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரிய நியமனம் கிடைக்க பத்திராதிபதி தொழிலைவிட்டு ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டார். தமிழ்க் கல்வியியல் தொடர்பில் தேசிய கல்வி நிறுவகம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றிற்கு தனது சேவையை வழங்கினார். பல்வேறு இதழ்கள், சஞ்சிகைகள், சமய நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் ஆகிய வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பல பிரதிகளை இவர் எழுதியுள்ளார்.

விருது

இந்துக்குரல் பத்திரிகைப் பணிப்பாக அகில இலங்கை இந்துப் பேரவையினால் 2000ஆம் ஆண்டு தங்கப் பதக்கம். அகில இலங்கை ரீதியில் சிறந்த ஆசிரியர் சேவைக்காக கல்வி அமைச்சினால் 2011ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதான பிரதீபா பிரபா. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் 25 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றிமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2011இல் விருது.

வளங்கள்

  • நூலக எண்: 33209 பக்கங்கள்