ஆளுமை: பிரேமலதா, தம்பிப்பிள்ளை

From நூலகம்
Name பிரேமலதா
Pages தம்பிப்பிள்ளை
Pages செல்லம்மா
Birth 1981.10.05
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர், கலைஞர்

பிரேமலதா, தம்பிப்பிள்ளை (1981.10.05) யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை; தாய் செல்லம்மா. ஆரம்பக் கல்வியை சித்தங்கேணி கணேசா வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியினை மாங்குளம் மகாவித்தியலயத்திலும் கற்றார். சிறுவயதிலேயே எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ள எழுத்தாளர் முகநூல் ஊடாக இரண்டு வருடமாக தனது ஆக்கங்களை எழுதி வருகிறார். கவிதை, கட்டுரை எழுதும் திறன்கொண்ட எழுத்தாளர் கிளிநொச்சி கதிரொளி கலைக்கூடத்தினூடாக மக்களுக்கான சிந்தனை மாற்றத்துக்கான விவாதநாடக ஆற்றுகையாளராக பல வருடங்களுக்கு மேலாகச் செற்பட்டு வருகிறார். யோகாசானப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் பிரேமலதா. ஒளி அரசி சஞ்சிகையில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான நாடகம் தொடர்பான ஆ்றறுகை மட்டும் பயிற்சி பட்டறைகளையும் மேற்கொள்கிறார். உருக்கி வார்த்த உணர்வுகள் கவிதை தொகுப்பை விரைவில் வெளியிடவுள்ளார்.

விருதுகள்

முகநூல் குழுமத்தின் ஊடாக இவரின் கவிதைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது.

இவரின் ஆக்கங்களுக்கு 250க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.


குறிப்பு : மேற்படி பதிவு பிரேமலதா, தம்பிப்பிள்ளை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.