நிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர்
முகவரி வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி 021-320-8223
மின்னஞ்சல்
வலைத்தளம்

இந்து சமுத்திரத்தின் முத்து என சிறப்பிக்கப்படும் இலங்கைத் திருநாட்டிலே வன்னிப்பெரு நிலப்பரப்பிலே கற்றோரும் மிக்காரும் சீரோடும் சிறப்போடும் வாழும் வடமாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டம் சிறப்போடு மிளிர்கின்றது. இயற்கையன்னை எமக்களித்த நீர்வளத்தையும் நிலவளத்தையும் தன்னகத்தே கொண்டு வந்தாரை வரவேற்கும் வட்டக்கச்சிக்கிராமம் 1953.10.12.; ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றமாகும். இக்காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு செல்வங்களுள் சிறந்த செல்வமாம் கல்விச்செல்வத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டுமென எண்ணி காணி அபிவிருத்தி திணைக்கத்தினரால் பாடசாலையை உருவாக்குவதற்கு காணி ஒதுக்கப்பட்டதுடன் அதில் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியதும் பிரம்மாண்டமான 120×25அளவுடைய மண்டபமொன்றும் குடிநீர்க்கிணறு ஒன்றும் அதிபர்விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டு அறிவாலயம் மணம் வீசத்தொடங்கியது 13.05;.1954 இல் வட்டக்கச்சி கிழக்கு அ.த.க.பாடசாலை எனும் பெயருடன் 19 மாணவர்களுடனும் தன் பணிக்காக காலடி எடுத்து வைத்தது எனலாம். இவ்வேளையில் இப்பணியின் மேன்மைக்காக உழைத்த திருவாளர் பா.கனகசபை அவர்கள் தலைமை ஆசிரியராகவும் செல்வி க.கௌரியம்மா உதவி ஆசியராகவும் கடமையாற்றிய சிறப்பிற்குரியவர்கள் ஆவார் 27.05.1955 அன்றைய நாள் வட்டக்கச்சி குடியேற்றத்திட்டத்தின் பொன்னான நாள் அன்று தான் அதிகாரபுர்வமான பாடசாலையாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டது அக்காலப்பகுதியில் கிராம சங்கத்தலைவராக விளங்கிய திருவாளர். வீரகத்தியார் சிதம்பரப்பிள்ளை அவர்களின் தலைமையில் திறப்புவிழா கோலாகலமாக ஆரம்பமாகி வடமாநில வித்தியாதியினால் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது இத்திறப்பு விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வடமாகாண அரசாங்க அதிபர் திருவாளர். ம.சிறீகாந்தா உதவி அரசாங்க அதிபர் திருவாளர் பத்மநாதன் மாணவர்கள்இ பெற்றோர்கள்இ பொதுமக்கள் எனப்பலரும் கலந்து இவ்விழாவைச் சிறப்படையச்செய்தனர். இப்பாடசாலையானது ஆரம்பத்திலே முதல் வகுப்பு தொடக்கம் ஜந்தாம் வகுப்பு வரை மட்டுமே அமைந்திருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து 1961 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை கொண்டதாக உயர்வடைந்தது இலவச மதிய உணவு பாடசாலைச்சீருடை போன்ற ஊக்குவிப்புக்களை வழங்கி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வழிவகைகள் செய்து கொடுக்கப்பட்டன. இதில்சிறப்பு என்னவென்றால் மதிய உணவாக தோசை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த தலைமைத்துவமும் ஆளுமையும் உடைய அதிபர்களாக திருவாளர் பெ.ஏஜயாத்துரை திருவாளர் சீ.கந்தப்பு ஆகியோர் ஒவ்வொருவரும் சுமார் ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றினார்கள் இவர்களது வழிகாட்டலில் பாடசாலையின் வளர்ச்சியை கண்ட மக்கள் களிப்புற்று இருந்தனர். 1960ஆம் ஆண்டு 5ம்தரப்புலமைப்பரிசில் பரீட்சை முதல் தடவையாக மாணவர்கள் தோற்றினார்கள் 1962 இல் முதன் முறையாக இல்ல விளையாட்டுப்போட்டிநடைபெற்றதுடன் கலைவிழா ஒன்றும் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்ட 1966ல் திருவாளர் சி.கந்தப்பு அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் தபால் விநியோகத்தை இலகுபடுத்தும் நோக்கில் இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனும் அழகிய நாமத்துடன் பிரகாசிக்கத்தொடங்கியது இக்காலத்தில் தான் மாணவர்கள் சிலர் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்று உயர் கல்வி கற்பதற்காக வேறு பாடசாiகை;குச் சென்றனர் மாணவர் தொகையும் காலத்திற்கு காலம் அதிகரிக்கப்பட்டு வந்தைமையும் பாடசாலை வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைந்தது. சமநிலை ஆளுமைப்பண்பும் சிறந்த தலைமைத்துவமும் பாடசாலையை நிர்வாகக் திறனும் கொண்ட திருமதி செல்லையா திருவாளர்; ந.மகாலிங்கம் திருவாளர் பொ.சுப்பிரமணியம்.திருவாளர் சி.பேசூசைப்பிள்ளை திருவாளர் என்.கே.தருமலிங்கம் திருவாளர் இ.இராசரத்தினம் செல்வி தி.வேலுப்பிள்ளை திருவாளர் கனக மகேந்திரா திருவாளர் ஆ.கருணாநிதி திருவாளர் சி.பாலகிருஸ்ணன் திருவாளர் சி.திரவியம் திருமதி சி.சுதாகரன் ஆகிய தலமையாளர்களின் வழிகாட்டுதலிலும் இவர்களின் அயராத அர்ப்பணிப்பான சோராத மனப்பாங்கிலும் கலைக்கூடம் வளர்ச்சி கண்டு தேசிய ரீதியிலும் முன்னிலை அடைந்த என்பது குறிப்படத்தக்க விடயமாகும்

1982 இல் செல்வி தி.வேலுப்பிள்ளை அவர்கள் அதிபராக பதவி ஏற்ற காலத்தில் இசைக்கருவிகள் பெறப்பட்டுஅணி இசைக்குழு முதன் முதலில் உருவாக்கப்பட்டது தட்டெழு இயந்திரங்கள் பாடசாலைக்கு கிடைத்ததும் சிறந்தொரு வரப்பிரசாதமாக இத்துணைச்சாதனங்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிப்பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருந்தது 1989.06.23.இல் திருவாளர் கனக மகேந்திரா அவர்கள் அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றார். மேற்கின் புகழ் சூரியக்கதிர் போல் பரவிய காலம் அன்று அரும்பாடு மாணவரது வளர்ச்சியிலும் தீவிர ஈடுபாடு கொண்டு மேன்மை மிக்க பாடசாலையாக வீ அடிகோலினார் பாடசாலைச்சுழல் நிழல் தருமரங்கள் கொண்டதாகவும் தற்காலிக கொட்டகைகளுடன் அதிபர் விடுதிக்கான கிணறும் அமைக்கப்பட்டு எழில் மிக்ககலைக்கூட தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் பணியாற்றிய பெருமையைப் பெறும் அதிபரும் இவராவார். இக்காலப்பகுதியிலேயே தமிழ் மொழித்திறன் போட்டிக்கான காத்தான் கூத்து மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமையும் மற்றும் இசை நடன நாடகப்போட்டிகளிலும் விவசாயப் பொதுஅறிவுப் போட்டிகளிலும் கோட்ட மாவட்ட பரிசில்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். வன்னிப்பெரு நிலப்பரப்பின் வலைப்பந்தாட்ட சம்பியனாகவும் எறிபந்துப்போட்டியின் சம்பியனாகவும் தாச்சிப்போட்டி சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுடைய திறமைகள் வெளிக்கொணரப்பட்ட காலமாக விளங்குகின்றது. 1991 ஆண்டிலிருந்து இடப்பெயர்வு காலம் வரை தொடர்ச்சியாக உடற்பயிற்சிப் போட்டியில் பெண்கள் அணி மாவட்டமட்ட பரிசில்களோடு மாகாணம் தேசியம் வரை சென்று வென்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 1889 இலிருந்து இடப்பெயர்வு காலம் வரை தரம் ஜந்திற்கான புலமைபரீட்சையில் மாணவர்கள் தொடர்ச்சியாக சித்தியடைந்து வந்தமையும் அறியமுடிகின்றது அந்த வகையில் செல்வன் ம.ரூபவண்ணன் எனும் மாணவன் 163 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்தான். திருவாளர் கனகமகேந்திரா அதிபர் அவரகள் இடம்மாற்றம் பெற்றுச்செல்ல 04.06.1999 இலிருந்து திருவாளர் ஆ. கருணாநிதி அவர்கள் அதிபராக கடமை ஏற்றுக்கொண்டார். 2002ஆம் ஆண்டில் உடற்பயிற்சிப் போட்டியில் தேசிய ரீத்யில் தங்கப்பதக்கத்தை தனதாக்கி வெற்றி வாகை சுடியது எமது பாடசாலை பெண் அணி என்பது குறிப்பிடதக்கதாகும் இவ் வெற்றிக்குபாடுபட்ட ஆசிரியர்கள் பாரட்டுதற்குரியவர்கள் திருமதி ஜெ.நளாயினி ஆசிரியரின் நெறிப்படுத்தலில் கீற்று இதழாசிரியர்ஸ செல்வி கவிதா. கனகராசா) எனும் கையெழுத்து சஞ்சிகை மாணவர்களால் வெளியிடப்பட்டு மகாண மட்டத்தில் பரிசிலையும் பெற்றுக்கொண்டமையும் மேலும் கல்வி கலை விளையாட்டு எனப்பல்துறை வளர்ச்சியிலும் மாவட்ட மாகாண தேசிய ரீதியிலும் பரீசில்களைப்பெற்றுக்கொண் பாடசாலையாகும் மாணவர்கள் சிறந்த ஆளுமைப்பண்பு கொண்டவர்களாக வளர வேண்டும் எனும் நோக்கில் கல்விச்சுற்றுலா ஓன்று ஓழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவந்தமையும் காலத்திற்கேற்ற வகையில் எங்கெல்லாம் போட்டிகளும் பரீட்சைகளும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் எமது பாடசாலை காலடி பதித்துக் கொண்டது. திருவாளர் ஆ. கருணாநிதி அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச்செல்ல 06.01.2003 இல் திருவாளர் சி.பாலகிருஸ்ணன் அவர்கள் அதிபராகக் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் பதவி ஏற்ற காலம் தொடக்கம் மாணவர்கள் தமிழ்மொழிக்கலைத்திறன் போட்டிகள் மெய்வல்லுனர் போட்டிகள் ஆங்கிலதினப் போட்டிகள் பெருவிளையாட்டுக்கள் திருக்குறள் போட்டிகள் சைவநெறித்தேர்வுகள் பொதுப்பரீட்சைகள் எனப்பல்துறைகளிலும் மாணவச்செல்வங்கள் தடம் பதித்த மாவட்ட மாகாண தேசிய போட்டிகளில் பங்குபற்றி பெருமை சேர்க்கும் வகையில் பெறுபேறுகள் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். உடற்பயிற்சிப் போட்டிகளில் எமது பாடசாலை பெண்கள் 2003இ 2005 ஆகிய காலப்பகுதிகளில் சிறப்பு வழிநடத்தலின் ஊடாக மாகாண ரீதியில் 1ம் 2ம் இடங்களை பெற்றும் 2004 தேசிய ரீதியில் பங்கு பற்றிய வெண்கலப்பதக்கங்களை பெற்றமையும் பாடசாலைக்கு பெருமை சேர்வனவாகும.; ஆங்கிலதினப்போட்டிகளில் பங்கு பற்றி தேசியம் வரை சென்று வந்தமை வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கதாகும.; இவருடைய காலப்பகுதியில் தான் ஆண் அணி முன்னிலைப்படுத்தப்பட்டு கரப்பந்தாட்ட அணி பல வெற்றிகளைப் பெற்று பெருமை சேர்த்தது. இவற்றோடு தடகள விளையாட்டுக்களிலும் மாணவர்கள் மாவட்ட மாகாண தேசிய ரீதியில் பரிசில்களை பெற்றமையும் போற்றுதற்குரிய விடயமாகும். பௌதீக வளங்களின் தேவையை உணர்ந்து எமது பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக நூலகம் ஒன்றனை நிலையானதாக 40×25 அளவுடையதாக அமைக்கபட்டுள்ளதுடன் 40 20 அளவுடைய விஞ்ஞான அறை ஒன்றும் அமைக்கப்பட்டும் மாணவர்களிற்கு போதிய வகுப்பறை இன்மையால 120×25 அளவுடைய ஆறு பிரிக்கப்பட்ட வகுப்பறைகளைக் கொண்டதுமான நிரந்திரக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டமையும் காலத்திற்கு காலம் பாடசாலை வளவினை பாதுகாப்பதற்கு வேலி அடைக்க வேண்டிய தேவை அறிந்து 180 அடி நீளமுடைய மதில் கட்டப்பட்டு நிரந்தர வாயிற் கதவு இடப்பட்டமையும் இக்காலப்பகுதியிலேயே எமது பாடசாலை பொன்விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி பாடசாலச்சமூகம் மகிழ்வடைந்தமையும் போற்றப்பட வேண்டியவையாகும். திருவாளர் சி. பாலகிருஸ்ணன் அதிபர் அவர்கள் 09.01.2007. இல் இடம் மாற்றம் பெற்றுச் செல்ல அதிபராக திருவாளர் சி.திரவியம் அவர்கள் 10.01.2007. பொறு பேற்றுக்கொண்டார் இக்காலப்பகுதியில் மாணவர்கள் கலைத்திட்ட பரீட்சைகளிலும் மற்றும் இணைபாடவிதமான செயற்பாடுகளிலும் பொது பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட காலத்தில் ஏற்பட்டபோர்ச்சுழல் காரணமாக 08.01.2005 இடப்பெயர்வினை சந்தித்து மீண்டும் 26.04.2010. இல் தன் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது இவருடைய காலப்பகுதி எமது பாடசாலையின் வரலாற்றில் பொற்காலம் என்று குறிப்பிடகூடிய அளவில் மாணவர்களது கலைத்திட்ட தேவைகளிற்கும் இணைபாடவிதமான செயற்பாடுகளிற்கும் என்று கருதத்தக்க கட்டங்கள் அனேகமானவை கட்டப்பட்டன. அந்தவகையில் கணனி அறை 26×20 அளவுடையதும் அதிபர் அலுவலகம் 20× 25அளவுடையதும் நடன கட்டிடத்திற்கான அறை 20×25அளவுடையதும் மிகப்பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்த வெளி அரங்கு போன்றவற்றை பாடசாலை சமுத்தினரிடம் இருந்து அன்பளிப்பாக பெற்றுகட்டப்பட்டமையும் ஆரம்பிக் கல்வி மாணவர்கள் கற்பதற்கு சகல வசதி வாய்ப்புக்களுடன் கூடிய 5 வகுப்பறைகள் 25×120 அளவுடையதாகவும் முழுஐஊயு கட்டடம் கட்டப்பட்டமையும் கொண்டு பார்க்கும் போது இராமநாதபுரம் மேற்கின் கட்டடங்களின் மன்னன் எனச்சிறப்பிக்கப்படும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தமை கண் கூடாகும் பாடசாலைக்குள் வரும் பள்ளிச்சிட்டுக்கள் மனமகிழ்ச்சியோடும் வருகை தர வேண்டும் என்பதனை கருத்திற்கொண்டு பாடசாலை வளாக முன்றலில் அழகிய புந்தோட்டம் வந்தனை செய்யவும் அதில் கல்விக்கூட வளர்ச்சிக்கு அனையவள் ஆசி வேண்டிட அழகிய சரஸ்வதி சிலையையும் அமைப்பித்த பெருமையும் இவரையே சாரும் இவை அனைத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் கலைத்திட்ட பரிPட்சைகள் இணைபதடவிதமான செயற்கபாடுகள் பொதுப்பரீட்சைகள் என சகல விதமான செயற்பாடுகளிற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து கோட்ட மாவட்ட மாகாணப் போட்டிகளில் ஈடுபட்டுவெற்றியீட்டியமையும் மனங்கொள்ளத்தக்கதாகும் 2013 கரப்பந்தாட்ட அணியினர் மாவட்ட மட்டத்தில் 1ம் நிலை பெற்று மாகாணமட்டம் சென்று வெற்றி பெற்றமையும் மாவட்டமட்ட ஆங்கில தினப் போட்டியில் சுழடந Pடயல 1ம்இடத்தைப்பெற்று மாகாண போட்டியில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும் எமது பாடசாலையில் சாரணர் இயக்கம் திருமதி.சி.சுதாகரன் அவர்களால் 10.02.2012 அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் வீறுநடை போட்டுக் கொண்டிருப்பதும் இப்பள்ளிச்சாரணர்கள் பாடசாலைக்கு மட்டுமன்றி எமது கிராமத்திற்கும் அரும் பெரும் பணியாற்றி வருகின்றமை பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும் திருவாளர் சி.திரவியம் அவர்கள் 17.11.2014. இல் ஓய்வு பெற்றுச் செல்ல திருமதி சி.சுதாகரன் அவர்கள் 18.11.2014. இல் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார் பாடசாலையை செவ்வனே நடாத்தி மாணவர்களது கலைத்திட்ட செயற்பாடுகள் இணைப்பாடவிதமான செயற்பாடுகள் மற்றும் பொதுப்பரீட்சைகள் ஆகிய சகலதுறைகளிலும் எமது பாடசாலை பிரகாசித்து விளங்கியமையும் அறிய முடிகிறது கரப்பந்தாட்ட அணியினர் மாவட்ட நிலையில் வெற்றி பெற்று மகாணபோட்டியில் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும் எமது பாடசாiயின் அழகிய சுழலை பாதுகாப்பதற்கும் மாணவர்களின் குடிநீர் பிரச்சினை எக்காலத்திலும் ஏற்படாதிருக்க நீர்க்குழாய் அமைக்கப்பட்டமையும் குறிகப்பிடத்தக்கதாகும் மேலும் 2015 ல் ஆங்கில தினப்போட்டியிலும் மற்றும் சமூக விஞ்ஞான போட்டியிலும் சித்திரப்போட்டி தமிழ்மொழித்திறன் போன்ற போட்டிகளில் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்று மாகாண தேசிய ரீதியில் இடங்களைப் பொற்றமையும் பாராட்டுவதற்குரியதாகும். திருவாளர் சுந்தரேஸ்வரன் சுதாஸ்வரன் 01.01.2016 அதிபராக கடமைப் பொறுப்பேற்று அன்று தொடக்கம் இன்று வரை பாடசாலைச்சூழலில் அழகை செவ்வனே பேணியதுடன் கலைத்திட்ட செயற்பாடுகள் ஊடாக மாணவர்களை முன்னிலை அடையச்செய்ததுடன் இணைப்பாடவிதமான செயற்பாடுகளிலும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தலிலும் மற்றும் பொதுப்பரீட்சைகள் போட்டி நிகழ்வுகள் அனைத்திலும் மாணவர்கள் போட்டியிடக் கூடிய வகையில் மாணவச்செல்வங்களை வழிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைஉயர்நிலை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலை காணியை சீர்நிலைப்படுத்தி நில அளவைத்திணைக்களத்தால் அளவிடப்பட்டதும் சிறுவர் புங்கா மிக அழகான முயையில் அமைக்கப்பட்டதுடன் பாடசாலை திருவள்ளுவர் சிலை அமைத்தும் பாடசாலைக்கான சுற்று மதில் அமைக்கும் பணியையும் மேற்பிடத்தக்கதாகும் இவற்றுக் கெல்லாம்பெருமை சேர்க்கும் வகையில் இடப்பெயர்வுக்காலத்தின் பின் பெண்கள் உடற்பயிற்சி அணி போட்டியில் 2016 இல் மாகாணமட்ட போட்டியில் பங்கு பற்றியமையும் மாகாணமட்டப்போட்டிகள் சித்திரப்போட்டிகள் சமுக விஞ்ஞான போட்டிகள் ஆங்கில தினப்போட்டிகள் பலவற்றில் மாவட்ட மாகாண தேசிய ரீதியில் பரிசைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் மொழித்திறன் போட்டியில் பாவோதலின் 2018இல் தேசிய ரீதியில்1ம் இடத்தை செல்விச.பாகமள் பெற்று பெருமை சேர்த்தமையும் தரம் 5புலமைப்பபரீட்சையில் செல்வன் பாயுகான் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட நிலையில் 9ம் இடத்தைப்பெற்றமையும் பாராட்டுக்குரியதாகும். கல்வி அமைச்சின் புள்ளி விபரப்படி 2017இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 87.2 பெறுபேறுகளைப்பெற்று மாவட்ட நிலையில் பெருமை பெற்ற பாடசாலையாக திகழ்ந்து வருகின்றமையும் மேலும் எமது பாடசாலையானது சுகாதார மேம்பாடுடைய பாடசாலை என்பதை பிரதிநிதித்துவம் வகையில் மாகாண ரீதியாக தங்கபதக்கத்தைப்பெற்று பெருமை சூடியமையும் 2018ல் தமிழ்மொழித்தின திறந்த நாடகப்போட்டி மற்றும் குழுநடனம் (பொம்மலாட்டம் ) மாகாணரீதியில் பங்குபற்றியமையும் சமுக விஞ்ஞானப்போட்டியில் தேசிய ரீதியில் பரிசில்களைப் பெற்றுக்கொண்டமையும் அரச நடன விழாவில் தேசிய ரீதியில்1ம்இடத்தை பெற்றமையும் போற்றுவதற்குரிய விடயமாகும். எங்கெல்லாம் தேர்வுகளும் போட்டிகளும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் எமது பாடசாலை கால்த்தடம் பதித்து எமது பெருமையை பறைசாற்றி வருகின்றமை பேற்றப்பட வேண்டியதாகும்.இவ்வாறாக வைரவிழா காணும் எமது பாடசாலை பழம்பெரும் பெருமைகளைக் கொண்டிருக்கின்றது. இப்பாடசாலையானது சமூகத்திலும் மாவட்டத்திலும் மாகாணத்திலும் ஏன் தேசியத்திலும் பெருமை பறைசாற்றக்கூடிய பாடசாலையாகவும் பல புத்திமான்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கி வைரவிழாவைக்கடந்தும் தலை நிமிர்ந்து நிற்பது இக்கிராமத்திற்குபெருமை சேர்ப்பதாகும்.