ஆளுமை:அமீனா, சராப்தீன்

From நூலகம்
Revision as of 09:40, 10 December 2019 by Hamsa (talk | contribs) ("{{ஆளுமை| பெயர்=அமீனா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அமீனா
Pages எம்.ஏ.இஸ்மாயில்
Pages மீராஉம்மா
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்

அமீனா, சராப்தீன் கண்டி உடத்தலவின்னை மடிகேயில் பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை எம்.ஏ.இஸ்மாயில்; தாய் மீரா உம்மா. இவரின் கணவர் கணித ஆசிரியர் சராப்தீன் ஆவார். நான்கு பிள்ளைகளின் தாயாராவார். உடத்தலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜீ.சீ.ஈ உயர்தரம் வரை கல்விகற்றார். ஆசிரியரான இவர் கொழும்பில் உள்ள கவின் கலைக் கல்லூரியிலும் அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும் சித்திரக்கலை தொடர்பான பயிற்சியை முடித்துள்ளார்.

சித்திரக்கலை தொடர்பாக மூன்று நூல்களை 1996ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அல்-இல்மா மகளிர் இயக்கத்தின் செயலாளராகப பல சமூக சேவைகளையும் செய்துவருகிறார்.

விருதுகள்

பாத்ததும்பரை பிரதேச சபை இவரது சமூக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.