ஆளுமை:அம்பிகைபாகன், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name அம்பிகைபாகன்
Pages வேலுப்பிள்ளை
Birth 1965.07.16
Place காங்கேசன்துறை
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகைபாகன், வேலுப்பிள்ளை (1965.07.16 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் முதுதத்துவமானி பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்து இந்து ஆலய தேர்ச்சிற்பங்கள் பற்றி ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ள இவர் கலை விமர்சகராக, திறன் ஆய்வாளராக, கலை வரலாற்று ஆசிரியராக, நூல்களின் ஆசிரியராக, பதிப்பாளராக, சிற்பியாக, நிர்மாண ஸ்தபதியாக, கட்டடக் கலைஞனாக பல தொழில்களைப் புரிந்துள்ளார்.

கலாகேசரியும் தேர்சிற்பக் கலையும், முறைசார் கல்வியில் புதிய பயிற்சி நெறிகள், செல்வச்சந்நிதி தேர்த்திறன், சக்தியின் வடிவங்கள் போன்ற ஆய்வு நூல்களை இவர் வெளியிட்டுள்ளதோடு இந்து தெய்வ வடிவங்கள், யாழ்ப்பாணத்தில் இந்து ஆலய தேர்க் கலை வளர்ச்சி போன்ற ஆய்வு நூல்களை வெளியிடவும் இவர் உதவியுள்ளார். இவர் விஸ்வமதுரப் பிரம்மாச்சார்ய பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 232-233