ஆளுமை:அரபா உம்மா, எம்.

From நூலகம்
Name அரபா உம்மா
Pages அலி உதுமான் லெப்பை
Pages ஸாரா உம்மா
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரபா உம்மா, எம் கண்டி ஹீரஸ்ஸகலையில் பிறந்த எழுத்தாளர். இஸ்லாமியச் செல்வி எனும் புனைபெயரிலும், ஏ.யூ.எல்.எஸ்.அரபா உம்மா, யூ.எல்,செல்வி அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய பெயர்களிலும் ஆக்கங்கள் எழுதி வருகிறார். தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவி. கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி தமிழ்ப்பாடப் பொறுப்பாசிரியராகவும் ஊடகப் பிரிவு பொறுப்பாசிரியையாகவும் உள்ளார். இவரின் கணவரின் பெயர் மன்சூர், மூன்று பிள்ளைகளின் தாயுமாவார்.

1984ஆம் ஆண்டு முதல் எழுத்துத்துறையில் ஈழுபட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, நவமணி, விடிவெள்ளி, தினக்குரல், எழுச்சிக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதும் திறமைக்கொண்டவர். ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளுடன் வானொலிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. வானொலி, தொலைக்காட்சிகளுக்கு நாடகப் பிரதிகளையும் எழுதி வருகிறார். 1989ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லம் சேவையின் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு பிரதியாக்கம் செய்துள்ளார். அத்தோடு கவிச்சரம், சிறுகதை, நாடகம், இளைஞர் இதயம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் குரல் கொடுத்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் மலையகச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கண்டி சித்திலெப்பை மகாவித்தியாலயம், கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரி என்பவற்றின் பாடசாலை கீதங்கள் இவரால் இயற்றப்பட்டதாகும். பாடு பாப்பா கதைகேளு பாப்பா என்ற பெயரில் இவர் 1994ஆம் ஆண்டு சிறுவர் கதை பாடல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

2012 மகா ரத்மல் உலல சிறந்த அறிப்பாளர் விருது

தேசிய கலை கலாசார திணைக்கள சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம், திறனாய்வு, பாடலாக்கம், சிறுவர் கதை போட்டிகளில் மாகாண மட்டம் முதலாம் இடம்.

2018ஆம் ஆண்டு தேசாபிமானி, இரத்தின தீப விருதுகள்.

2018ஆம் ஆண்டு பிரதீபா பிரபா சிறந்த ஆசிரியருக்கான விருது.

Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120