ஆளுமை:அஸ்மா, தீன்

From நூலகம்
Revision as of 07:25, 30 January 2020 by Hamsa (talk | contribs) ("{{ஆளுமை| பெயர்=அஸ்மா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அஸ்மா
Pages அன்வர்ஷா
Pages ஆயிஷா
Birth
Place கம்பளை
Category எழுத்தாளர்

அஸ்மா, தீன் கம்பளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அன்வர்ஷா; தாய் ஆயிஷா. கம்பளை ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலே கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம், சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றார். பாடசாலைக் காலத்திலேயே நாடகம் எழுதித் தயாரித்து நடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். வானொலி முஸ்லிம் சேவை மாணவர் மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் 2001ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலாசார திணைக்களமும், வானொலி முஸ்லிம் சேவையும் இணைந்து நடாத்திய தேசிய நாடகப் பிரதி எழுதும் போட்டியில் முதலிடம் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தது.


கவிதை, சிறுகதை, கட்டுரை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது ஆக்கங்கள். விடிவெள்ளி, தினக்குரல், நவமணி பத்திரிகையிலும் வானொலியிலும் வெளிவந்துள்ளன. முஸ்லிம் சேவையில் 14 நாடகங்களை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1990ஆம் ஆண்டு சிகரம் என்கின்ற மலையக சஞ்சிகையிலேயே வெளிவந்ததது. ஆலமரம் என்ற சமூக நாவலையும் இவர் எழுதியுள்ளார். அல் குர்ஆனையும், அல் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு ”சிந்தனை” என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 14 தலைப்புகளுக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் கவிதைத் தொகுதியொன்றையும் வெளியிடவுள்ளார்.