ஆளுமை:ஆறுமுகம், சி.

From நூலகம்
Name ஆறுமுகம்
Birth
Place புங்குடுதீவு
Category ஆசிரியர், சொற்பொழிவாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், சி. புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், சொற்பொழிவாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு தமிழ்த்துறைப் பேராசிரியாக விளங்கிய இவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும், எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றினார். புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவராக இருந்து சமயப் பணியாற்றினார்.

இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் படைத்த இவர், பாடசாலைக் கீதங்கள் முதல் ஆலய ஊஞ்சற்பாக்கள் வரை பல கவிதைகளை எழுதியுள்ளார். 'நல்லூரான் நாற்பது' என்னும் கவிதை நூலால் கவிதை உலகில் பாராட்டப்பட்ட இவர், மாதகல் வ.கந்தசாமியுடன் இணைந்து 'கலைமதி' என்னும் சஞ்சிகையை நடாத்தினார். அத்துடன் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் 'ஈழத்துச் சொற்செல்வர்கள்' என்னும் நூலில் சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 81-83