"ஆளுமை:சசிகலா, குகமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சசிகலா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 22: வரிசை 22:
 
ஆய்வுக்கான விருது- இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம் 2017 ஆண்டு  
 
ஆய்வுக்கான விருது- இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம் 2017 ஆண்டு  
  
குறிப்பு : மேற்படி பதிவு சசிகலா, குகமூர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
+
குறிப்பு :மேற்படி பதிவு சசிகலா, குகமூர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|14791|4-6}}
 +
{{வளம்|14469|7-11}}

23:23, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் சசிகலா
தந்தை பாலசிங்கம்
தாய் பத்மாவதி
பிறப்பு 1958.03.09
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர் ,கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சசிகலா, குகமூர்த்தி யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை பாலசிங்கம் தாய் பத்மாவதி. ஆரம்பக் கல்விமுதல் உயர் கல்வி வரை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கற்று 1981ஆம் ஆண்டு பேராதெனியப் பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணத்தில் பனை வளத்தின் செல்வாக்கு என்ற தலைப்பின் கீழ் கலைமாணி சிறப்புப்பட்டத்தை புவியியலில் பெற்றுக்கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் 1993 இல் சமூக நகர்வில் சமூகக் கல்வியின் எண்ணக்கருக்களின் தாக்கம் என்ற தலைப்பில் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கையை மேற்கொண்டு அதில் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். கல்வியியல் முதுதத்துவமாணியை யாழ் பல்கலைக்கழகத்தில் யாழ்பாணத்து பெண்கள் கல்வியும் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கிடைத்த புலமைப்பரிசிலில் கல்வியில் கலாநிதிக்குரிய ஆய்வை இந்தியாவில் தமிழ்நாட்டில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இதில் பெண் ஆசிரியர்களின் தொழில் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் – இலங்கையையும் இந்தியாவையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வு என்பது ஆய்வுக்குரிய தலைப்பாக இருந்தது.

1982 ஆம் ஆண்டு கொழும்பு திருக்குடும்ப கன்னியர் மடத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்துள்ளார். அடுத்து 1984 அம் ஆண்டு அரச பாடசாலையில் பணியாற்றினார் 2004 ஆம் ஆண்டு இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையேற்றார். 2015 ஆம் ஆண்டு கல்விப்பீடத்தின் இரண்டாம் மூன்றாம் நிலைக்குரிய கல்வித் துறைக்கான துறைத்தலைவராக 2015 முதல் 2018 வரை இருந்துள்ளார். தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தின் விசேட கல்வித்துறைக்கான துறைத் தலைவராக இருந்து வருகின்றார். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் 2010ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படும் பார்வை என்ற கல்வியியல் சஞ்சிகையின் பிரதம ஆசியராக 2012 முதல் 2019 வரை இருந்துள்ளார். அகவிழி, ஆசிரியம், பார்வை ஆகிய சஞ்சிகைகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

யாழ்பல்கலைக்கழகப் பீடாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்பாணத்து பெண்கள் கல்வியும் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலான புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இவரே இலங்கையின் கல்வித்துறையில் முதலாவது தமிழ் பெண் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. . விருதுகள்

1993 ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் அதிகூடிய பெற்றமைக்கான தங்கப் பதக்க விருது – பேராசிரியர் பி.சந்திரசேகரம் அவர்களின் விருது.

ஆய்வுக்கான விருது- இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம் 2017 ஆண்டு

குறிப்பு :மேற்படி பதிவு சசிகலா, குகமூர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 14791 பக்கங்கள் 4-6
  • நூலக எண்: 14469 பக்கங்கள் 7-11