"ஆளுமை:செல்வராசன், ஆசைப்பிள்ளை மரியதாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சில்லையூர் செல்வராசன் (1933.01.25 - 1995.10.14) எழுத்தாளர்; கவிஞர்; நடிகர். யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்தவர்.
+
செல்வராசன் (1933.01.25 - 1995.10.14) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், நடிகர். இவர் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாகப் பங்களிப்புச் செய்தவர். இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அவை அங்கதப் பாணியில் அமைந்தன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கும் இவரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. இது கிழமைகளையும், மாதங்களையும் வைத்து  வடித்த பாடலாகும்.  
கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். அங்கதப் பாணிக் கவிதைகள் எழுதிய இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரு வரவேற்பு பெற்றன.  
 
விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கிய பெருமையும் அவரைச் சாரும். சில்லையூராரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து அழகாக வடித்த பாடலாகும்.
+
இவர் 20 ஆம் நூற்றாண்டில் பெரும் கவிஞராகத் திகழ்ந்ததுடன் தணியாத தாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கி  ஏராளமான நேயர்களை மகிழ்வித்துச் சாதனை படைத்தார். இவர் தமிழில் சேக்ஸ்பியர் கவிதைகளையும் ஜுலியஸ் சீசர் நாடகத்தயும் மொழிபெயர்த்தார். இவர் 1959 இல் பம்பாயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றினார். இவ்வாறு  பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார்.
 
20 ஆம் நூற்றாண்டின் பெரும் கவிஞராகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் தணியாத தாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கிச் சாதனை படைத்தார். ஏராளமான நேயர்கள் வாரம் தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள். சேக்சுபியர் கவிதைகளை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். சூலியஸ் சீசர் நாடகத்திலிருந்து இவர் மொழிபெயர்த்த பகுதி சிறப்பானதாகும். 1959ல் பம்பாயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்குபற்றியவர். 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார்.
 
ஆங்கிலப்படங்களிலும், "கோமாளிகள்" என்ற இலங்கைப்படத்திலும் நடித்துள்ளார். மறைந்த ஈழத்து எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்திலே முக்கிய பாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றவர். பூந்தான் சோசப் அண்ணவியாரின் இயக்கத்தில் நாட்டுக்கூத்திலும் நடித்த பெருமைக்குரியவர்.
 
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார்.
 
சில்லையூர் செல்வராசன், தான்தோன்றிக் கவிராயர் எனும் புனைப்பெயர்களைக் கொண்டவர்.  
 
 +
சில்லையூர் செல்வராசன், தான்தோன்றிக் கவிராயர் என்னும் புனைபெயர்களைக் கொண்ட இவர் ஆங்கிலப்படங்களிலும், "கோமாளிகள்" என்ற இலங்கைப்படத்திலும் நடித்துள்ளார். மறைந்த ஈழத்து எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். பூந்தான் சோசப் அண்ணவியாரின் இயக்கத்தில் உருவான நாட்டுக்கூத்திலும் நடித்த இவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

06:05, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்வராசன்
பிறப்பு 1933.01.25
இறப்பு 1995.10.14
ஊர் சில்லாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசன் (1933.01.25 - 1995.10.14) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், நடிகர். இவர் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாகப் பங்களிப்புச் செய்தவர். இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அவை அங்கதப் பாணியில் அமைந்தன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கும் இவரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. இது கிழமைகளையும், மாதங்களையும் வைத்து வடித்த பாடலாகும்.

இவர் 20 ஆம் நூற்றாண்டில் பெரும் கவிஞராகத் திகழ்ந்ததுடன் தணியாத தாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கி ஏராளமான நேயர்களை மகிழ்வித்துச் சாதனை படைத்தார். இவர் தமிழில் சேக்ஸ்பியர் கவிதைகளையும் ஜுலியஸ் சீசர் நாடகத்தயும் மொழிபெயர்த்தார். இவர் 1959 இல் பம்பாயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றினார். இவ்வாறு பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார்.

சில்லையூர் செல்வராசன், தான்தோன்றிக் கவிராயர் என்னும் புனைபெயர்களைக் கொண்ட இவர் ஆங்கிலப்படங்களிலும், "கோமாளிகள்" என்ற இலங்கைப்படத்திலும் நடித்துள்ளார். மறைந்த ஈழத்து எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். பூந்தான் சோசப் அண்ணவியாரின் இயக்கத்தில் உருவான நாட்டுக்கூத்திலும் நடித்த இவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 30-35
  • ஞாயிறு தினக்குரல் 2015.10.11 பக்கம் 27
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 83-87
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 30-35
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 26-30