ஆளுமை:ஜுனைதா ஷெரீப், கச்சி மொஹமட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹமட் ஷெரீப்
தந்தை கச்சி மொஹமட்
தாய் யூசுப் லெப்பை கஜீதா உம்மா
பிறப்பு 1940.09.15
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹமட் ஷெரீப், கச்சி மொஹமட் (1940.09.15 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை கச்சி மொஹமட்; தாய் யூசுப் லெவ்வை கஜீதா உம்மா. இவர் ஜுனைதா ஷெரீப் என்ற புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். அல் நஸார் வித்தியாலயமென பெயர் கொண்ட காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பாடசாலை, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

மட்டக்களப்பில் இயங்கிய நாடக குழுவொன்றில் சேர்ந்து இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது மூன்றாம் முறை, சிதைவுகள், சாட்சிகள் இல்லாத சாமத்தில் ஆகியவை தொடர்கதைகளாக தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் காட்டில் எறித்த நிலா, ஒவ்வாமுனைக் கடிதங்கள், இது நம்ம சொத்து, ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது ஆகிய நாவல்கள் சிறிலங்கா தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரனையுடன் இவரால் எழுதப்பட்டுள்ளன.

இவருடைய நூல்களுக்காக தேசிய ரீதியாகவும் மற்றும் வட கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, இலக்கிய வித்தகர் விருது உட்பட மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14522 பக்கங்கள் 03-05