ஆளுமை:ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகதீஸ்வரி, நாதன்
தந்தை சபாரெத்தினம்
தாய் நாகமணி
பிறப்பு 1960.04.23
ஊர் அம்பாறை, தம்பிலுவில்
வகை ஆசிரியை, கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகதீஸ்வரி, நாதன் (1960.04.23 - ) அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியை, கவிஞர். இவரது தந்தை சபாரெத்தினம்; தாய் நாகமணி. கலைமாணிப் பட்டதாரியான இவர், தம்பிலுவில் ஜெகா என்னும் புனை பெயரில் அறிமுகமானவர்.

இவர் தனது 12 ஆவது வயதில் 'அன்னை" என்னும் கவிதை மூலம் எழுதத் தொடங்கியதுடன் 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. இவர் கவிக்கோகிலம் என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவரது கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி, பெண் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவர் கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 150

வெளி இணைப்பு