ஆளுமை:ஜெஸீமா முஜீப்

From நூலகம்
Name ஜெஸீமா முஜீப்
Pages ஆதம்பாவா
Pages ஆயிஷா உம்மா
Birth 1971.07.14
Place மருதமுனை
Category எழுத்தாளர்,இலக்கியவாதி,சமூகசேவையாளர்,கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெஸீமா, முஜீப் மருதமுனையில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை ஆதம்பாவா; தாய் ஆயிஷா உம்மா பாடசாலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்திலிருந்து கலை ஆர்வம் கொண்ட இவர் சித்திரம் வரைதல், அலங்காரவேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபாட்டார்.

தனது 14ஆம் வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர். மருதமுனை மஹா என்ற புனைபெயரில் இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் வானொலியிலும் வெளிவந்தன. பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.நாட்டார் பாடல்கள் கட்டுரை, சிறுவராக்கம், சிறுகதை, போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவர். இவரது கவிதைகள் பிரதேசமட்டத்தில் மாத்திரமல்லாது மாகாணம், தேசியமட்டத்திலும் பல கவிதைத்தொகுப்புகளில் வெளிவந்துள்ளன.

எஹெட் நிறுவனத்தின் பிரீடம் (freedom ) மகளிர் மன்றத்தின் தலைவியாகவும் செஷ்டோ (cesdo ) நிறுவனத்தின் மகளிர் மன்றசெயலாளராகவும் பிராந்தியத்தின் சமூக குழுக்களில் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் இருந்துவருகின்றார். நிறந்தீட்டப்பட்ட சித்திரம், வினாவைத் தேடும் பதில்கள் கவிதைத் தொகுப்புகள் வெளிவர உள்ளன.

விருதுகள்

சிறந்த சமூக,கலைப்பணிக்காக 2017.12.14 அன்று கலாசார அலுவல்கள் திணைக்கத்தினூடாக கலைஞர் சுவதம் விருது

19.10.2019 அன்று கல்முனை கலாசார மத்திய நிலையத்தினால் சேவை பாராட்டு விருது.

2017 ,2018 ,2019, 2020 ஆகிய வருடங்களில் தொடச்சியாக சர்வதேச மகளிர்தின கலை இலக்கிய சேவைக்கான கௌரவ விருதுகள்

மலையக இரத்தின தீபத்தினால் 2019.01.19 ”தேசாபிமானி சமூகதீபம்” கௌரவப்பட்டம் .

மலையக இரத்தின தீபத்தினால் 2019.02.24 இல் கலையரசி பட்டம்.

குறிப்பு : மேற்படி பதிவு ஜெஸீமா, முஜீப் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.