ஆளுமை:நிர்மலா, ராஜசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:42, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நிர்மலா, ரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிர்மலா, ராஜசிங்கம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிர்மலா, ராஜசிங்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில போதனாசிரியராகவும் பின்னர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றிய இவர் அமெரிக்காவின் 'பொஸ்ரன் வீட்டன்' கல்லூரியில் அரசியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று கலைமானிப்பட்டத்தைப் பெற்றவராவார். யாழ்ப்பாணத்திலிந்து வெளியான Saturday Review என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

இவர் ராஜசிங்கம் Tennessee Williams எழுதிய The Glass Menagerie என்ற நாடகத்தை ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற பெயரிலும், ரஷ்ய நாடக ஆசிரியர் Aleksei Arbuzov எழுதிய Old World என்ற நாடகத்தை ‘பழைய உலகம் புதிய இருவர்’ என்ற தலைப்பிலும், Federico Garcia Lorca எழுதிய The House of Bernarda Alba என்ற நாடகத்தை ‘ஒரு பாலை வீடு’ என்ற பெயரிலும்,Bertolt Brecht எழுதிய The Exception and the Rule என்ற நாடகத்தை ‘யுகதர்மம்’ என்ற பெயரிலும் சிறந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய ஹிட்லரும் றிச்சேட் வாக்னரும் (Hitler Richard Wagner) என்ற கட்டுரைக்கு எதிராக மேற்கத்தைய இசை குறித்து மிக விரிவாக இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை தமிழில் மேற்கத்தைய இசை குறித்து வெளிவந்த ஆழமான கட்டுரையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்