ஆளுமை:நிஸ்னியா, முஸ்தகீமா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிஸ்னியா
தந்தை முஹம்மது நியாஸ்
தாய் அன்வரா
பிறப்பு
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஸ்னியா, முஸ்தகீமா புத்தளம் கொத்தாந்தீவு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது நியாஸ்; தாய் அன்வரா. புத்தளக்கவி நிஸ்னி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியை கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலயத்திலும் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைத் தொடர்ந்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பாடலாக்கம், குறுந்திரைப்படத் திரைக்கதையாக்கம் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் நிஸ்னியா. இவர் கவியரங்கம், விவாதக்களம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார். ஆக்கங்கள் பல வலையொளியிலும் பதிவேற்றப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். தமிழ் மிரர், மெட்ரோ, விடிவெள்ளி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் தமிழ் பட்டறை போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. ஒரு சிற்பியின் ஓவியம் என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மரபுக்கவிதை, கிராமியக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் பாடல், ஹைக்கூ எனப் பல துறைகளிலும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார் நிஸ்னியா.

விருதுகள்

முகநூல் குழுமத்தில் கிராமியக் கவிதைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது. ஊ ல ழ ள குழுமத்தில் சிறந்த பாடலாக்கத்திற்கான விருது.

படைப்புகள்

  • ஒரு சிற்பியின் ஓவியம் (கவிதைத் தொகுதி)


குறிப்பு : மேற்படி பதிவு நிஸ்னியா, முஸ்தகீமா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்