ஆளுமை:பேரின்பநாயகி, கனகரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேரின்பநாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாயகி கனகரத்தினம்
பிறப்பு 1951.04.21
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.பேரின்பநாயகி (1951.04.21 - ) யாழ்ப்பாணம் அரியலையச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். சிறு வயதிலிருந்தே இவர் இத் துறையில் காட்டிய ஆர்வம் காரணமாக ஆரம்ப காலத்தில் சமூக நிலையில் நாடகங்கள் பங்கு கொண்டு நடித்து வந்த இவர் அரிச்சந்திரா, பவளக்கொடி, வீரத்தாய், சாணக்கிய சபதம் ஆகிய நாடகங்களில் நடித்தமைக்காக பெரும் பாராட்டுதலையும், மதிப்பினையும் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் 1998ஆம் ஆண்டு நடத்திய நாட்டுக்கூத்துப் போட்டியில் பவளக்கொடி என்னும் நாட்டுக் கூத்தில் பாத்திரமேற்று நடித்தமைக்காக இவர் சிறந்த நடிகைக்கான பரிசினைப் பெற்றுக் கொண்டார். மேலும் அரிச்சந்திரா இசை நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

2008ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை நடத்திய கலைவிழாவில் இடம்பெற்ற சங்கிலியன் நாட்டுக்கூத்தில் பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் முடியப்பு அருட்பிரகாசம் அவர்களோடு இணைந்து தன் ஆற்றம்மிகு நடிப்பினை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

{{வளம்|7571|178}