ஆளுமை:மஞ்சுளா, கண்ணன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:05, 26 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மஞ்சுளா, கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஞ்சுளா, கண்ணன்
தந்தை விநாசித்தம்பி
தாய் நாகபூஷணி
பிறப்பு 1976
இறப்பு -
ஊர் கொடிகாமம்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஞ்சுளா, கண்ணன் (1976) யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை விநாசித்தம்பி; தாய் நாகபூஷணி. சிறுவயதிலேயே பாடல்களை இயற்றிப் பாடும் திறன் கொண்ட இவருக்கு தாயாரே குருவாக திகழ்ந்துள்ளார். இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

1991-1998 வரையான காலப்பகுதிகளில் நம் நாட்டுப் பாடல்களை பாடி பலரது வரவேற்பை பெற்றதோடு 1998-2005 வரையான காலப்பகுதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைக்குழுவிலும், ஆனந்த இசைக்குழுவிலும், கீதம் இசைக்குழுவிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட மேடைகளில் இவர் பாடியுள்ளதோடு பல இறுவட்டுக்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலைத் திறமையைப் பாராட்டி வசீகர இசைக்குயில் எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மஞ்சுளா,_கண்ணன்&oldid=316990" இருந்து மீள்விக்கப்பட்டது