ஆளுமை:மஸீதா, முஹமது அப்துல்காதர்

From நூலகம்
Name மஸீதா
Pages முஹமது அப்துல்காதர்
Pages ரஹமதும்மா
Birth
Place மக்கொனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஸீதா, முஹமது அப்துல்காதர் மக்கொனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹமது அப்துல்காதர்; தாய் ரஹ்மதும்மா. ஆரம்பக் கல்வியை மக்கொனை அல் ஹஸனியா முஸ்லிம் பாடசாலையிலும் இடையிலை, உயர்கல்வியை தர்காநகர் முஸ்லிம் பெண்கள் கல்லூரியிலும் கற்றார். ஆசிரியராக இருக்கும் இவர் ஆசிரியர் நியமனத்தை பெறுவதற்கு முன்னர் இரண்டு வருடம் தாதியாக கடமையாற்றியுள்ளார். அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார். கவிதை, கதை, நாடகம், இசைப்பாடல், ஆய்வு எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர். வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிய மாதர் மஜ்லிஸ் நிகழச்சிக்கு பிரதிகளை எழுதியதோடு நேரடியாக கலந்து கொண்டு குரல் கொடுத்தள்ளார். மேடை நிகழ்ச்சிகளை தயாரித்து மேடையேற்றியுள்ளார். இவர் வாழும் பகுதியில் மாதர் சங்கம் ஒன்றை உருவாக்கி இப்பகுதி பெண்களிடையே சமூக சேவையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் இலங்கை நலன்புரிச் சங்கத்துடனும் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்ச் சேவையின் உரைச்சித்திரம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளார். தமிழ் நடிகர் சங்கத்தின் நிறைவேற்ற உறுப்பினராகவும் இவர் அங்கம் வகித்துள்ளார். மொரட்டுவை எகொடஉயனப் பகுதியில் சமாதான நீதவானாக செயற்படும் ஒரேயொரு முஸ்லிம் பெண் ஆவார். நேரத்ரா தொலைக்காட்சியின் கவிரங்குகளிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். முத்துக்கள் ஆயிரம் என்ற பொன் மொழிகள் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

அரச விருதான கலாசாபூஷண விருது இலக்கியத்துக்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் தேசகீர்த்தி பட்டம்.