ஆளுமை:மேரிறெஜினா, சசிந்திரசிங்கம்

From நூலகம்
Name மேரிறெஜினா
Pages பெனடிக் புஷ்பராஜா
Pages மேரி ரீட்டா
Birth 1976.08.04
Place முல்லைத்தீவு வற்றாப்பளை
Category கலைஞர், அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரிறெஜினா, சசிந்திரசிங்கம் (1976.08.04) முல்லைத்தீவு வற்றாப்பளையில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை பெனடிக் புஷ்பராஜா; தாய் மேரி ரீட்டா. ஆரம்ப இடைநிலைக் கல்வியை முல்லைத்தீவு வற்றாப்பளை மகாவித்தியாயத்திலும் உயர்தரக் கல்வியை முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரியிலும் கற்றார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தை முடித்துள்ளார். பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை யாழ் பல்கலைக்கழத்திலும் கல்வி முதுமாணி பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

கவிதை, நாடகம், சிறுகதை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் சாளரம் சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. நூல்களை ஆய்வு செய்தல் விமர்சனம் செய்தல் என்பனவற்றை மேற்கொள்கிறார். இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் முதன்மை ஆசிரியருமாவார்.

சமூக சேவையாளராக இருக்கும் இவர் தற்பொழுது முழுமையான அரசியலில் ஈடுபட்டுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் (தமிழ் மக்கள் தேசிய முன்னணியில்) இணைந்து செயற்பட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வேட்பாளராகவும் இருக்கின்றார்.