ஆளுமை:மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மேரி தஸ் நெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ்
தந்தை லடிஸ்லாஸ், பிலிப்பு
தாய் பிலோமினா
பிறப்பு -
இறப்பு -
ஊர் வடமராட்சி
வகை அருட்சகோதரி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரி தஸ் நெவிஸ் லடிஸ்லாஸ் யாழ்ப்பாணம், வடமராட்சி, செம்பியன்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி. இவரது தந்தை லடிஸ்லாஸ், பிலிப்பு; தாய் பிலோமினா. யாழ் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், யாழ் செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, யாழ் பாசையூர் சென் அன்ரனீஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுதத்துவமாணி ஆகிய பட்டங்ளையும், கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்திலும், திருவிவிலிய டிப்ளோமாவை திண்டிவனம் லாமன் கல்வி நிறுவனத்திலும், உளவியல் டிப்ளோமாவை I.C.O.F.நிறுவனத்திலும் பெற்றுள்ளார்.

திருக்குடும்ப கன்னியர் மடத்தினில் தன்னை இணைத்து துறவியான இவர் தனது முதல் அர்ப்பணத்தினை 1972.03.06 இலும் நித்திய அர்ப்பணத்தினை 1980.02.23இலும் பெற்றார். மேலும் கிளி/ புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, கிளி/ பளை மகா வித்தியாலயம், யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம், யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், யாழ் புனித அன்னாள் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 53836 பக்கங்கள் 15