ஆளுமை:லூயிசா நேசம், சரவணமுத்து

From நூலகம்
Name லூயிசா நேசம்
Pages அருணாசலம்
Pages எமிலி தங்கம்மா குக்
Birth 1897
Pages 19.01.1941
Place யாழ்ப்பாணம்
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நேசம் சரவணமுத்து (1897) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர், வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது தந்தை அருணாசலம்; தாய் எமிலி தங்கம்மா குக். மருத்துவர் சேர் இரத்தினசோதி சரவணமுத்து அவர்களை 1915ஆம் ஆண்டு திருமணம் செய்தார். நேசம் நான்கு பிள்ளைகளின் தாயாராவார். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரியவர் நேசம் சரவணமுத்து. இவரின் கணவர் இரத்தினசோதி சரவணமுத்து: கொழும்பு மாநகரச சபையின் முதலாவது மேயராக தெரிவு செய்யப்பட்டார். இவரின் தெரிவு செயல்லுபடியற்றது என ஏழு ஆண்டுகளுக்கு இவரது குடியியல் உரிமை ரத்துச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1932ஆம் ஆண்டு 30ஆம் திகதி நேசம் சரவணமுத்து போட்டியிட்டார். இவருடன் போட்டியிட்ட எச்.எம்.பீரிஸ் அவர்களையும் பார்க்க நேசம் சரவணமுத்து அதிகமான வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது இடைத்தேர்தல் நவம்பர் 30ஆம் திகதி 1932ஆம் ஆண்டு நடைபெற்றது அதிலும் இவர் தன்னை எதிர்த்து: போட்டியிட்ட எச்.வி.காசிச்செட்டியிலும் பார்க்க அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நேசம் சரவணமுத்து அவர்கள் 1941.01.19ஆம் திகதி காலமானார்.