ஆளுமை:வாசுகி, சுதாகரன்

From நூலகம்
Name வாசுகி
Pages குணராஜா
Pages பரமேஸ்வரி
Birth 1968.10.27
Place யாழ்ப்பாணம் திருநெல்வேலி
Category எழுத்தாளர், கலைஞர், அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுகி, சுதாகரன் (1968.10.27) யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை குணராஜா; தாய் பரமேஸ்வரியாவார். யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். வட இலங்கை சங்கீத சபையின் நாடகத்துறைக்கான கலாவித்தகர் பட்டத்தையும் பெற்றுள்ளார். கவிதை, கட்டுரை என்பனவற்றை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் வலம்புரி, உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் மண் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன. விழி என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி என தன்னை ஒரு அரசியல்வாதியாக வெளிப்படுத்தும் இவர் பாடசாலையில் பின் தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் வாழ்க்கைக் கல்வியைக் கற்க வைத்தமை, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாடகத்துறையால் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை, 1998ஆம் ஆண்டிலிருந்து சுகவாழ்வுக்கான நிறுவனத்தின் உதவியுடன் எயிட்ஸ் விழிப்புணர்வினை நாடகத்தின் மூலம் யாழ் மாவட்டம் முழுவதிலும் பல ஆண்டுகளாக விழிப்பணர்வின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முன்னின்று உழைத்து வருகிறார். இவரின் சேவையை பாராட்டு சுகவாழ்வு நிறுவனம் இவருக்கு சிறப்பு கௌரவம் வழங்கியது.

பல தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து தனித்தும் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் பால்நிலை சமத்துவ விழிப்புணர்வு 1999, 2000ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளார். பாடசாலை மாணவர்களின் போதைப் பாவனையிலிருந்து மீட்க பல நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்டச் செயலக அனுமதியுடன் கல்விக்கரம் உதவி மையம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிட்டதட்ட 40 பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் பெண்கள் அமைப்புகளுடாக போதையிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுகிறார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் ஆரம்பத்தில் கல்வித் திணைக்களமும் அழகியற் கலாமன்றத்துடனும் இணைந்து மக்கள் ஆற்றுப்படுத்தல் மகிழ்வூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். பாடசாலையில் உளவள ஆலோசனை மூலம் இளம் சமூகத்தை நல்வழிப்படுத்த தொடர்ந்தும் போராடிக்கொண்டுள்ளார்.

கலைகலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை மீளுருவாக்கம் செய்வதற்கு பாடசாலை ஊடாகவும் அரசியலூடாகவும் பாடுபட்டிக்கொண்டுள்ளார். இவரின் வட்டாரத்திலுள்ள வலுவிழந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளையும் செய்து வருகிறார். தற்போது கொரோனா பேரிடரின் போதும் மக்களுக்கு உதவி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு வாசுகி, சுதாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.