"ஆளுமை:ஹினாயா, பவ்சுல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 18: வரிசை 18:
  
 
== படைப்புகள் ==
 
== படைப்புகள் ==
* [[அவளுக்கு ஒரு பெண்]]   
+
* [[அவளும் ஒரு பெண்]]   
 
* [[ரம்யா நீ ஒரு...?]]   
 
* [[ரம்யா நீ ஒரு...?]]   
 
* [[அதுதான் சஸ்பென்ஸ்]]   
 
* [[அதுதான் சஸ்பென்ஸ்]]   

20:19, 28 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் பவ்சுல் ஹினாயா
தந்தை எச்.எம்.மொஹிதீன்
தாய் சித்தி ஜுவைரா
பிறப்பு 1955.02.25
இறப்பு 2014.08.15
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பவ்சுல் ஹினாயா என்ற இயற்பெயரைக் கொண்ட மாத்தளை பர்வீன் (1955.02.25) மாத்தளையில் பிறந்தவர், இவரது தந்தை எச்.எம்.மொஹிதீன்; தாய் சித்தி ஜுவேரா. மாத்தளை பாக்கியா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். லறீனா, ரெஸா உல் ஹக், முஹம்மது றிழ்வான், ஃபாத்திமா ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயார் பர்வீன். தனது 14ஆவது வயதிலேயே எழுத்துத்துறைக்கு பவ்சுல் ஹினாயா பிரவேசித்துள்ளார். இவரின் மகள் லறீனா ஹக் பிரபல எழுத்தாளரும், பெண்ணியவாதியுமாவார். 1984ஆம் ஆண்டு இவர் எழுதி மித்திரன் பத்திரிகையில் வெளிவந்த "யாரோ அவர் யாரோ" சிறுகதை இலங்கை வானொலி வாலிபர் வட்ட நிகழ்ச்சியிலும் ஒலிபரப்பப்பட்டது. "கடிதம்" சித்திரக்கதை இவரின் முதலாவது கதையாகும். இதில் இடம்பெற்றுள்ள சித்தரமும் இவரின் ஆக்கமே. சித்ரா, மித்திரன், ஜனனி, ரஞ்சனி போன்ற பத்திரிகைகள் மூலமாக எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். 1972ஆம் ஆண்டு இவரின் முதலாவது கையெழுத்துப் பிரதியான "அவளுக்கு ஒரு பெண் கதை" பின்னர் 1985 ஆம் ஆண்டு மித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. பர்வீன் எழுதும் கதைகள் அநேகமாக துப்பறியும் மர்ம நாவல் பாணியிலேயே அமைந்திருப்பதால் அவரின் வாசகர்கள் "மர்மக் கதை எழுத்தாளர்" என்றே எழுத்தாளரை அழைத்தனர். பி.எச்.அப்துல் ஹமீத் தயாரித்தளித்த பாட்டுக்குப் பாட்டு போட்டியில் எப்போதும் முதலிடமே பெற்று வெற்றிக்கொடி நாட்டிய பிரபல பாடகியாகவும் பர்வீன் திகழ்ந்தார். பாடல் இயற்றல், மெட்டமைத்தல், ஓவியம் வரைதல், எம்ரொய்டிங் செய்தல் போன்றவற்றிலும் திறமைக்கொண்டவராக இவர் இருந்தார். தொழில்சார் தையல்கலை நிபுணராகப் பணியாற்றினார். மாத்தளை பர்வீன் என்ற புனைப்பெயில் நீண்டகாமாக வாரப் பத்திரிகைகளில் எழுதி வந்த பவ்சுல் ஹினாயா 2014.08.15 புற்றுநோயால் மரணமடைந்தார்.

குறிப்பு: மேற்படி பதிவு எழுத்தாளரின் மகளான லறீனா ஹக் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

பத்திரிகைகளில் வந்த மாத்தளை பர்வீன் தொடர்கதைகள்

படைப்புகள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹினாயா,_பவ்சுல்&oldid=281403" இருந்து மீள்விக்கப்பட்டது