ஆளுமை:ஹூஸைன் பாரூக், முஹம்மட் புஹாரி

From நூலகம்
Name ஹூஸைன் பாரூக்
Pages முஹம்மட் புஹாரி
Birth 1945.02.24
Place கொழும்பு
Category எழுத்தாளர்

ஹூஸைன் பாரூக், முஹம்மட் புஹாரி (1945.02.24 - ) கொழும்பு, அலுத்மாவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர், வானொலி - தொலைகாட்சிக் கலைஞர், மூத்த பத்திரிகையாளர். இவரது தந்தை முஹம்மட் புஹாரி. இவர் கொழும்பு ஹமீத் சுல் ஹீனஸைனி கல்லூரியில் கல்வி கற்று ஊடகத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றார். மும்மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.

இவரது முதலாவது ஆக்கமான கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்ற குட்டிக் கட்டுரை 1958 இல் தினகரனில் பிரசுரமானது. கட்டுரைகள், ஒலிச்சித்திரங்கள், குட்டிக்கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாடகங்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் தயாரித்த வானொலி நிகழ்ச்சிகளில் முத்துச்சரம், இரசிகர் அரங்கம், திரைமுத்து, கன்ஸீல் இஸ்லாம் என்பவை முக்கியமானவை. நீந்தத் தெரியாத மீன்கள், அந்த முகமா இந்த முகமா போன்ற பல தமிழ் நாடகங்களை எழுதியுள்ளார். டுபாய் தர்பார் இவரது நாடகம். இவர் தினக்குரல், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகையின் நிருபராகவும், டய்ம்ஸ் ஒப்ஸிலோன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் கலைச்சுடர் என்னும் பட்டம் பெற்றவர்.

Resources

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 86-91

வெளி இணைப்புக்கள்