செட்டை கழற்றிய நாங்கள்

From நூலகம்
செட்டை கழற்றிய நாங்கள்
150px
Noolaham No. 177
Author பாலமோகன்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher விடியல் பதிப்பகம்
Edition 1995
Pages 70

To Read

Book Description

30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுப்பு, இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது. இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

இதில் உள்ள ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு, நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் குறுகிப் போவதிலான இயலாமையுடனான கோபம்... என்று உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும், நெகிழ்வுகளும், நிகழ்வுகளும், ஆற்றாமைகளும் புதைந்து கிடக்கின்றன.


பதிப்பு விபரம்
செட்டை கழற்றிய நாங்கள். பாலமோகன். Swiss: 1வது பதிப்பு, மார்கழி 1995. (அச்சு: மனோ ஆப் செட், சென்னை 600 005, வெளியீடு: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலப் பாளையம், கோவை 641015)

70 பக்கம், விலை:ருபா 20