பகுப்பு:கதிரவன்

From நூலகம்
Revision as of 23:24, 8 September 2015 by Pirapakar (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

'கதிரவன்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற கல்வி இலக்கிய கலை சஞ்சிகை ஆகும். இதழின் வெளியீடு 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் கதிரவன் த. இன்பராசா.

புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்வதையும் மூத்த படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஆவணப்படுத்தலையும் நோக்கமாக கொண்ட ஓர் வெளியீடாகும். உள்ளடக்கத்தில் சமூகவியல் கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், குறு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றுடன் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தொகுப்பையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- பிரதம ஆசிரியர், கதிரவன், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு, இலங்கை. T.P:-0094-77-4651732, 0094-65-4903006, 0094-77-4339087