மதங்க சூளாமணி

From நூலகம்
மதங்க சூளாமணி
325.JPG
Noolaham No. 325
Author விபுலானந்த அடிகள்
Category நாடகமும் அரங்கியலும்
Language தமிழ்
Publisher பிரதேச அபிவிருத்தி அமைச்சு
Edition 1987
Pages xxii + 116

To Read

நூல்விபரம்

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்களின் அணிந்துரையுடன் கூடிய இந்நூல் சுவாமி விபலாநந்தரின் மூலநூலின் மீள் பிரசுரமாக வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியர் மீதும் அவரது நாடகங்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அடிகளார் அவருக்கு “செகசிற்பியர்” என்று தமிழில் பெயர் வழங்கியவர். ஷேக்ஸ்பியரின் அடியொற்றி, நாடகப் பாத்திரங்கள், சம்பாஷணைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அடிகளார் இந்நூலில் தந்திருக்கிறார். விபுலாநந்தரின் பெயர் கூறும் நாடகத்தமிழ் ஆய்வு நூல் இதுவாகும்


பதிப்பு விபரம் மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல். விபுலானந்த அடிகள். கொழும்பு: பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 2வது பதிப்பு, ஜுலை 1987, 1வது பதிப்பு, 1926. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). xxii + 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (2384)