ஆளுமை:சாந்தி, விக்டர்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 6 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தி
தந்தை பொன்னையா
தாய் இந்திராணி
பிறப்பு 1966.02.18
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி, விக்டர் (1966.02.18) கிளிநொச்சி, பரந்தனில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் இந்திராணி. கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றார். 1980ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் சாந்தி விக்டர். கவிதை, சிறுகதை,கட்டுரை எழுதும் பன்முகத் திறமைகளைக் கொண்ட சாந்தியின் ஆக்கங்கள் வீரகேசரி, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. ”உயிர் சுமந்த சுமை” என்னும் இவரின் கவிதைத் தொகுதியின் முதலாம் பாகம் 2015ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதனின் இரண்டாம் பாகம் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளிவரவில்லை. ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் எழுத்தாளரின் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளமையை பெருமையாகக் கூறுகிறார். 2018ஆம் ஆண்டு பரந்தன் வட்டாரம் கரைச்சி பிரதேச தேர்தலில் பெண் வேட்பாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் பெண்களை அணிதிரட்டி இவர் போராடி வருகிறார். கிளிநொச்சி இரணைமடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் தனி பெண்ணாக குரல் கொடுத்து வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு சாந்தி, விக்டர் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சாந்தி,_விக்டர்&oldid=404430" இருந்து மீள்விக்கப்பட்டது