ஆளுமை:இராயப்பு, குருசுமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராயப்பு
தந்தை குருசுமுத்து
பிறப்பு 1949.11.10
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராயப்பு, கு. (1949.11.10 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருசுமுத்து. இவர் கல்விப் பொது சாதாரண தரம் வரை பயின்று, கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் 1960 - 1981 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியதோடு, 1968 ஆம் ஆண்டில் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட உலகின் ஒளி என்னும் தொகுப்பு நூலின் ஆசிரியராகவும் நம் ஒளி என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், கடலலைகள் கொஞ்சும் நகர், குருதிக் குளியல் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் 2006 இற்கான பல்துறைப் பரிசும் இவருக்குக் கிடைத்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 02-03